Thursday 7 November 2013

இல்லை இருபது!



உடையது விளம்பேல்!

(எல்லோரும் தங்களிடம் இருப்பது பற்றி பெருமையாய் பேசுவாங்க!,நாம ஒரு மாறுதலுக்கு இல்லாததைப்பற்றி பேசுவோமே!)


1.முத்து பதித்த நகை எதுவுமே என்னிடம் இல்லை.(அதுக்காக வைரம் பதித்தது இருக்கான்னு கேட்கப்படாது)

2.எனக்கு அறிமுகம் இல்லாதவர்களின்(பெண்களின்)கிசு கிசு கேட்க ஆசையே இல்லை.

3.பிறர் வைத்திருக்கும் பொருள்மேல் மோகம் எப்போதுமே இல்லை.(வாங்க வக்கில்லை)

4.காலேஜ் வாழ்க்கை ரொம்ப ஆசை ஆனால் போனதே இல்லை?(ஒழுங்கா படிச்சிருக்கனும் ?)

5.ஒருபக்கம் விடாமல் ஆங்கில புத்தகம் எதையும் படித்ததே இல்லை( புரிந்தால்தானே படிக்க?)

6.கணவருக்கு தெரியாமல் அவர் பணத்தை செலவு செய்ய மனம் வந்ததே இல்லை(வாய்ப்பு கிடைத்தும்)

7.நட்புக்காக , போன் பில் கணக்கு பார்க்கும் பழக்கம் இல்லவே இல்லை(உள்ளூர் நட்புகளுக்கு மட்டும்)

8.என்னதான் ருசியாகவும் மணமாக இருந்தாலும் பிடிக்காத உணவை டேஸ்ட் பண்ணும் ஆசை வந்ததே இல்லை.

9.காதல் பண்ணிய அனுபவம் இல்லை,நேராக திருமணம்தான்(ராசி இல்லையோ)

10.நகைசுவை உணர்வு இல்லாத நட்புகளோடு கொஞ்ச நேரம் கூட பேசுவது இல்லை.(நான் ரொம்ப ஸ்டிரிக்டு)

11.ஆடம்பர வாழ்க்கைக்கு மனம் ஆசைப்பட்டதே இல்லை(சட்டியில் இருந்தால்தானே?)

12.ஒருநாளைக்கு கூட போனில் பேசாத நாட்களே இல்லை(1990 வீட்டில் போன் வந்தநாள் முதல் இன்று வரை)

13.நான் இல்லாத பட ஆல்பங்களைப்பார்க்கும் பழக்கம் அறவே இல்லை(கட்டாயப்படுத்தினால் மட்டுமே உண்டு)

14.பல வர்ணங்களில் உதட்டுச்சாயம் என்னிடம் இல்லை(ஒரே வர்ணம்தான்)

15.புத்தகம் படிக்க மட்டுமே எப்போதுமே நேரம்‘இல்லை’(முகநூலில் மொக்கைபோட நேரம் சரியா இருக்கு)

16.அன்பு சம்பந்தப்பட்ட விசயங்களில் மட்டும் பொறாமை இல்லாமல் இல்லை.

17.சாப்பிடாமல் உறங்கிய நாட்கள் உண்டு,ஆனால் பேசாமல்(மெளனவிரதம்)இருந்த நாட்களே இல்லை.(இந்தியன் செத்துப்போயிடுவானே?)

18.இதுவரையில் சொத்தைப்பல் இல்லை,பல்வலியும் ஏற்பட்டது இல்லை.(32 பற்களும் வரிசையாக )

19.ஒருக்காலக்கட்டம் வந்தவுடன் அண்ணந்தம்பிகளோடு பேசுவது இல்லை(எல்லோரிடமும் சண்டைன்னா?)

20.பாடல்கள் கேட்காமல் ஒருநாள் கூட கழிந்ததே இல்லை

2 comments:

  1. நல்ல பகிர்வு,இப்புடி எத்தன பேரு உண்மை சொல்லுவாங்க? "இல்லை இருபது" ன்னு தலைப்பப் பாத்துட்டு,பயந்தே போயிட்டேன்!(என்றும் பதினாறுன்னு........).கிட்டத்தட்ட நாமும் இப்புடித்தான்.(அதுக்காக உதட்டுச் சாயமும் கூடவா ன்னு கேக்கப்புடாது!)ஹே!ஹே!!ஹே!!!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹஹஹா ஆமாம் ஒரே ஒரு வர்ணம்தான் உண்டு

      Delete