Tuesday 13 January 2015

மாத்தி யோசி...!


                     எஸ்.பி.எம் எனும் படிவம் 5 பரிட்சைக்கு தயாராகி கொண்டிருந்த  அந்த சமயத்தில்,எங்கள் தமிழ் ஆசிரியர் கட்டுரைகளைப் பற்றிபேசிக்கொண்டிருந்தார்.எல்லா விசயங்களையும் ரொம்ப சுவாரஸ்யமாய் சொல்வதில் அந்த ஆசிரியருக்கு நிகர் யாரும் இல்லை.என்னைக்கூட அடிக்கடி ‘ கறுப்பழகி செல்வி ரெட்டைச்சடைப் பின்னிக்கொண்டு வந்தால்,ரொம்ப அழகாக இருக்கிறாள்’ என்று சொல்வார்,அப்போது எனக்கு அதை சத்தியமாக  ரசிக்க தெரியாது .ஆனால் இப்போது யாரும் அப்படி சொல்ல மாட்டார்களா?என்று ஏங்குவதுதான் உண்மை! (இருந்தால் நாங்கள் சொல்ல மாட்டோமா செல்வி?என்று நீங்கள் கேட்பதுவும் எனக்கு வெளங்குது!!!!!)

               சரி கதைக்கு வருவோம்,’ரொம்ப கவனமாக எழுதுங்கள், தலைப்பை விட்டு வேற விசயத்துக்கு போய்விட்டால் ,கண்டிப்பாக எவ்வளவு சிறப்பாக எழுதியிருந்தாலும் புள்ளிகள் கொடுக்கமாட்டார்கள். நான் படித்த அனுபவம் ஒன்றை இங்கே  சொல்கிறேன் ஆனால் அதை யாரும் பின்பற்றக்கூடாது’என்றும் கேட்டுக்கொண்டார். ’படித்து  நன்றாக சிரித்தேன் ,ரசித்தேன்.எழுதிய மாணவன் சிந்தித்த விதம் எனக்கு பிடித்திருந்தது ‘ என்றார்.’சொல்லுங்க சார்,எங்களுக்கும் ஒரு டிப்ஸ் கொடுத்த மாதிரி இருக்குமே ‘என்று கேட்டோம். அதனால்தான் சொல்ல பயமாக இருக்கு,அப்புறம் நீங்களும் அதைப்போல எழுதிவிட்டால்?என்று ஆரம்பித்தார்.

                     தமிழ் பரிட்சைக்கு,    சில தலைப்புகளில் கட்டுரையை மனப்பாடம் செய்து கொண்டு தேர்வுக்கு சென்றான் அந்த ஏழை  மாணவன். அவன் மனப்பாடம் செய்த கட்டுரை ‘பசுமாடு’ ஆனால் பரிட்சைக்கு வந்த தலைப்போ ‘தென்னை மரம்’. மாணவனும் செய்வதறியாது, தன்னை கொஞ்சம் சுதாகரித்துக்கொண்டு எழுத தொடங்கினான். அதாவது ’பசு இருந்தாலும் பொன்,இறந்தாலும் பொன்’ என்று  தொடங்கி   கட்டுரை முழுவதும்  பசுமாட்டைப்பற்றி எழுதியவன் ,இறுதி வரியில் ‘ஆசிரியர் அவர்களே,  கீழே   நான் எழுதியுள்ள அந்த பசுமாட்டை,மேலே  நீங்கள்   கொடுத்திருக்கும் தலைப்பில் உள்ள   ’தென்னை மரத்தில்’தான் கட்டி போடுவார்கள்,ஆகவே என் கட்டுரையின் முக்கிய அம்சம் தென்னை மரம்தான்!என்று முடித்திருந்தான் !

                   தாளைத் திருத்திய ஆசிரியர் ,மாணவன் யுக்தியைக் கையாண்ட விதத்தைக்கண்டு வியந்து , மாணவனின்  நிலை கருதி  நல்ல புள்ளிகளை வழங்கினாராம் .இந்த கதையை என் ஆசிரியர் ,என் 18 வயசில்   கூறினார்.அதை ஏன் இப்போ சொல்றேன்னு கேட்கிறிங்களா? இல்லை ,நானும் போனவாரம்தான் ,என்  பகுதி நேர டிப்ளோமா  படிப்பின் முதல் பரிட்சையை எழுதினேன்.அந்த  கதைக்கும் ,நான் எழுதிய  பரிட்சைக்கும் சம்பந்தம் இல்லை என்பதை கூறிக்கொ(ல்)ள்கிறேன்.ஸ்ஸப்பா ,இந்த வயசில் படிச்சான் இப்படித்தான் ஆகும் போல?                                                                            

5 comments:

  1. சிறு வயது அனுபவம் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்...

    தற்போதைய மாணவர்கள் எல்லோரையும் மிஞ்சி விடுவார்கள் ஒரு கட்டுரையென்ன அனைத்து கேள்விகளுக்கும் இப்படித்தான் மாற்றிஎழுதிக்கொண்டிருக்கிறார்கள்...

    சில வினாக்களை படிக்கும்போது கோவமும் சிரிப்பு கலந்தேவரும்...

    ReplyDelete
    Replies
    1. கருத்து நன்றி சார்.தாங்களும் ஆசிரியர்தானோ ?

      Delete
  2. ஹ!ஹ!!ஹா!!!............டீச்சர் ,டீச்சர்..............சொதப்பிட்டீங்களோ?

    ReplyDelete
  3. இந்த உதாரணத்தை எங்கள் ஆசிரியரும் கூறி இருக்கார்! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete