Friday 25 December 2015

திருவாதிரையில் கிட்டிய இறை சிந்தனை!

          சின்னப்பிள்ளையாக இருந்த காலங்களில்,(திருமணமாகும்வரை), என் அம்மா பெயர் தெரியாத ஒரு அயிட்டத்தைச் செய்து பசியாறையாக கொடுப்பார். உப்புமாவும் இந்த பெயர் தெரியாத அயிட்டமும் செய்தால் ,அன்னிக்கு முழுதும் அம்மா மேல் கோபம் வரும்.என் பக்கத்து வீட்டுத் தோழிகளும் உறவுகளும் அதை விரும்பி உண்பர்.அதைப்பார்த்தால் இன்னும் கோபம் கோபமாய் வரும்.
                                                               
         காரணம் அம்மா, அவர்கள் சாப்பிடும்போது’இந்த வீட்டு கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை ‘எனவும் சொல்லுவாங்கள். வேறுவழியின்றி சாப்பிட்டு வந்த அந்த அயிட்டம்தான் ‘திருவாதிரை களி ‘என இன்று அதிகாலை ’ஆருத்ர தரிசனம்’ சென்ற போது தெரிந்து கொண்டதும் மெய் சிலிர்த்துப்போனேன்!திருவாதிரையன்று நடராஜருக்கு மிகவும் புனிதமான நிவேதனம் என்றும், மிக மிக சத்துள்ள உணவு என்றும் அங்கே உள்ளவர்கள் கூறியபோது ,எங்கள் மேல் அக்கறையுடன் செய்து,தெரிந்தோ தெரியாமலோ சிவபெருமானுக்கு உகந்த அமுதினை எங்களூக்கு சமைத்து கொடுத்த என் தாயார் (இன்றைய ஆருத்ர தரிசனம் காண ,தற்போது சிதம்பரம் சென்றுள்ள)அவர்களுக்கு ஒரு நன்றி சொல்ல தோணுச்சி!
                                                                         

       இப்படித்தான் பல செயல்களை(இறைசெயல்களை),சிறுபிள்ளைமுதல் தெரிந்தும் தெரியாமல் செய்தும்,பாமாலைகளை அர்த்தம் தெரியாமல் பாடியும் ,ஈசனின் கருணைக் கிடைக்கப்பெற்றிருக்கின்றோம்!தெரியாமல் செய்த செயலுக்கே இத்துனை அருள் கிடைக்கப்பெற்றிருந்தால், மணிவாசகர் வரிகளிள் பாடி இருப்பதுபோது போல ’சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து’ , எல்லாவற்றையும் உணர்ந்து,புரிந்து, செயல்பட்டால் கிடைக்கப்போகும் இறையருள் எத்தையக பேரின்பமாக இருக்குமோ? என மார்கழி திருவாதிரையான இன்று உணரச் செய்தான் ஆருத்ரன்.
                                                                   

1 comment:

  1. திருவாதிரை களி நல்லாத்தானேங்க இருக்கும்.
    உப்புமாவும் வெண்பொங்கலும் என்றால் நானெல்லாம் காத தூரம் ஓடிவிடுவேன்.
    இப்ப அயல் நாட்டு வாழ்க்கையில் இவையும் சாப்பிடும் நிலை வந்திருச்சு... ஓட முடியலை.

    ReplyDelete